fbpx

பிரான்சின் ’’ரியல் ஸ்பைடர்மேன் ’’ … 48 மாடிக்கட்டித்தில் ஏறும் விநோதம்…

பிரான்ஸ் நாட்டில் கயிறு கூட இல்லாமல் 48 மாடிக் கட்டிடத்தை சரசர வென ஏறும் இந்த ’’ரியல் ஸ்பைடர் மேனை ’’ பார்த்து பொதுமக்கள் விநோதமாக வியக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆலைன் ராபர்ட் . இவர் நேற்று தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ’’பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் ’’ என மக்களால் அழைக்கப்படும் இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உலகின் மிகப் பெரிய கட்டிடங்களில் அனுமதியில்லாமல் ஏறி சாகசங்களைச் செய்துள்ளார்.

நேற்று தனது பிறந்தநாளை ஒட்டி பிரெஞ்சின் தலைநகரான லா டிபென்சில் 187 மீட்டர் உயரம் கொண்ட மிக உயரயமான 48 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஏறி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ’’ எனது 60 வது பிறந்த நாளை முன்னிட்டு நான் மக்களுக்கு ஒருசெய்தியை கூற விரும்பினேன் அதனால் நான் இந்தக் கட்டிடத்தில் ஏறினேன். வயது எதற்கும் தடையில்லை இப்போதும் விளையாட்டில் நீங்கள் ஈடுபடலாம் , சுறுசுறுப்பாக இருக்கலாம் எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.’’ என்றார் . மேலும் ’’ நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் சத்தியம் செய்து கொண்டேன் எனது 60வது வயதில் நான் மிகஉயரமான கோபுரத்தில் ஏறுவேன் என. தற்போது நான் அதை எட்டிவிட்டேன்.’’ என்றார்.

1975ம் ஆண்டு இவர் உயரம் ஏறுவதற்கு பயிற்சிகள் எடுத்துக் கொண்டு பின்னர் தொடங்கினார். மலைகள் , உயரமான பகுதிகளில் ஏறிக்கொண்டிருந்த இவர் தனியாக 1977ம் ஆண்டு முதல் சரசரவென பல உயரமான பகுதிகளில் ஏறி உலகின் மலையேறுபவர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு உயரமான இடங்களில் ஏறியுள்ளார் . இதுவரை 150 உயரமான கோபுரங்களில் ஏறியுள்ளார். துபாயின் புர்ஜ் கலிபா, ஈபில் டவர் , சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பிரிட்ஜ் போன்ற உயரமானஇடங்களை ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உபகரணமும் இன்றி உயிருக்கு ஆபத்தை எதிர்கொண்டு ஏறியதால் இவர் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் கைகளாலும் கால்களில் ஷூ மட்டு அணிந்து கொண்டு ஏறுவார்.. கைகளில் அவ்வப்போது தடவிக்கொள்ள சாக்பீஸ் தூளை ஒரு பையில் வைத்திருப்பார் அவ்வளவே , 2018ம் ஆண்டு லண்டனின் 202 மீட்டர் உயரமான சேல்ஸ் ஃபோர்ஸ் என்ற உயரமான கட்டிடத்தை ஏறியபோது அந்நாட்டு போலீசாரால் இவர் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

மோசமான வானிலையால் வட்டமடிக்கும் விமானங்கள்….

Sun Sep 18 , 2022
மதுரையில் மோசமான வானிலை காரணமாக தலையிரங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து மாலை 4.23க்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் வந்தது. 5.45 மணிக்கு வந்த விமானம்  மோசமான வானிலை காரணமாக வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மழை மற்றும் மோசமான வானிலையால் வானில் விமானங்கள் மதுரை விமா நிலையத்தில் வட்டமடித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் இருந்து 5 […]
விமானம்

You May Like