fbpx

ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்..! மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு…!

தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவச நலத்திட்ட பணிகள் செய்வோம் என்கின்ற வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டனர். ஆண்டுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக வாக்குறுதியாக அறிவித்தது. விவசாயிகளுக்கு இலவசமாக நாட்டு மாடுகள், விதை நெல் வகைகள் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ராஷ்ரீய சமிதி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக; வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ.3016ஆக உயர்த்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4016-லிருந்து ரூ.6016 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல தகுதியானவர்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்து கொடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

மழைக்காலங்களில் வீடுகளில் கொசு தொல்லையா.? இனி கவலை வேண்டாம், இப்படி செய்து பாருங்கள்.!

Wed Nov 22 , 2023
மழைக்காலங்களில் மனிதர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயங்களில் முக்கியமான ஒன்று கொசுத்தொல்லை. இதுபோன்ற கொசுக்களால் நமக்கு தூக்கம் கேட்டு விடுவதோடு டெங்கு மலேரியா போன்ற அச்சுறுத்தக் கூடிய வியாதிகள் ஏற்படுகின்றன. மேலும் கொசுவை விரட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் கொசுவத்தி போன்றவற்றால் நமக்கு பலவிதமான சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆல் அவுட் போன்றவை அதிக விலை கொண்டதாக இருக்கிறது. எனவே இந்த மழைக் காலத்தில் கொசுவின் தொல்லையில் […]

You May Like