தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு 16.12.2022 வெள்ளிக்கிழமை முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.
இப்பயிற்சியில் சேரவிருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/3181Cpw என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04342-296188தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ,தகுதி வாய்ந்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.