சென்னை, அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் திருமா பயிலகத்தில் ஏப்.27-ம் தேதி முதல் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து அங்கனூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம் உள்ளிட்ட 18 இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இப்பயிலகத்தில் 27.04.2025 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC- குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4, (VAO) & SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு 86103 92275 என்ற எண், thirumapayilagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம். மேலும் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயிலகத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம் என விசிக தலைவரும் திருமா பயிலக காப்பாளருமான திருமாவளவன் அறிவித்துள்ளார்.