fbpx

செம சான்ஸ்…! TNPSC, RRB, SSC தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! முழு விவரம்

மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) தொகுதி- II & IIA முதல் நிலை தேர்வு 14.09.2024 அன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி- II & IIA முதன்மை தேர்வு மற்றும் தற்போது மத்திய இரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள RRB (காலிப் பணியிடம்-11,588) தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.09.2024 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 27237124 மற்றும் 044-27238894 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Free Coaching Course for TNPSC, RRB, SSC Examination by Tamil Nadu Government

Vignesh

Next Post

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது..! முழு விவரம்..!

Fri Sep 27 , 2024
Power outage is going to happen in these parts of Tamil Nadu in a little while..! Full details..!

You May Like