fbpx

சூப்பர்…! IAS, IPS தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி…! வரும் 13-ம் தேதி 17 மாவட்டத்தில் தேர்வு…! முழு விவரம்…

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதித்தேர்வு வருகின்ற நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையம் தெரிவித்துள்ளது .

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு; தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, 7077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023-ம் ஆண்டு மே மாதம் 28-ம் நாள் நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலைத்தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த ஆர்வலர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பயிற்சி மைய இணையதளத்தின் www.civilservicecoaching.com வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும். தேர்வு நாளை மறுநாள் காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலும், தொலைபேசி எண்: 044 – 24621475, அலைபேசி எண். 94442 86657 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Breaking: தொடர் கனமழை...! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு....!

Fri Nov 11 , 2022
கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், […]
#Breaking..!! 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!! முழு லிஸ்ட் உள்ளே..!!

You May Like