fbpx

’மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்’..! தமிழக அரசுக்கு யோசனை சொல்லும் ராமதாஸ்..!

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம் என்ற ஜார்கண்ட் மாநிலத்தின் திட்டத்தை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஜார்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப் போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

’மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்’..! தமிழக அரசுக்கு யோசனை சொல்லும் ராமதாஸ்..!

ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவான வெகுமதியாக இருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்று நட வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். இன்றைய சூழலில், உலகையும், உலக மக்களையும் காக்க இந்த உணர்வு தான் தலையாயத் தேவையாகும். மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்க்ரீட் பாலைவனங்களான நகர்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும். ஜார்கண்ட் அரசுக்கு பாராட்டுகள்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

Chella

Next Post

சென்னையில் சொத்து வரி நடவடிக்கை தீவிரம்..! இனி வீடுகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு..!

Sun Jul 24 , 2022
சென்னையில் சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வு குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. அதன்படி, […]

You May Like