fbpx

பிரதமர் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம்…! தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு

பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தில் பயனாளிகளை அதிகம் இணைக்குமாறும், அதன் மூலம் அவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் துறையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் திட்டங்களான 800 மெகா வாட் வடசென்னை அனல் மின் திட்டம் – III (மூன்றாம் நிலை), 2X660 மெகா வாட் உடன்குடி அனல் மின் திட்டம் (முதல் நிலை), 2X660 மெகா வாட் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், 600 மெகா வாட் எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாக அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.

மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், மின் இழப்பைக் குறைப்பதற்காக 8,932 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய, மாநில அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் லால், கடந்த இரண்டு நாட்களாக அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் தமிழ்நாடு மின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தில் பயனாளிகளை அதிகம் இணைக்குமாறும், அதன் மூலம் அவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசை கேட்டுக்கொண்டார்.

English Summary

Free electricity under PM Solar Rooftop Scheme

Vignesh

Next Post

மக்களை அச்சுறுத்தும் போலி பதிவுகளை உடனடியாக நீக்குங்கள்!. சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Sun Oct 27 , 2024
Fake Bomb Threats: Central Govt Orders Social Media Platforms To Act, Or Face Action

You May Like