fbpx

நோட்…! வரும் 21-ம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாம்…!

வரும் 21-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்வி நிறுவனங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற்பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் 150-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுயவிவரம் (Bio Data), உரியகல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை கலந்துகொள்ளவும்.

இம்முகாம் முற்றிலும் ஆகியவற்றுடன் இலவசமானது. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள 04286-222260 அல்லது 63803 69124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free employment camp on coming 21st

Vignesh

Next Post

தஞ்சையில் மீண்டும் அதிர்ச்சி..!! லிஃப்ட் கொடுப்பது போல் பேசி பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

Fri Sep 6 , 2024
The shocking incident of a woman raped by a woman in the asylum has shocked.

You May Like