fbpx

இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி.. மாத சம்பளமாக ரூ.2 இலட்சம் வழங்கப்படும்….! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 இலட்சம் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025-க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ‌மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

English Summary

Free German language training.. A monthly salary of about Rs. 2 lakh will be provided….! Tamil Nadu government’s super announcement

Vignesh

Next Post

பெண்களுக்கு செம வாய்ப்பு...! அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பது எப்படி...? அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு...!

Wed Mar 5 , 2025
How to make cosmetics...? Free training course by the government

You May Like