fbpx

ஆதார் இணைக்காவிட்டாலும் இலவச ரேஷன் திட்டம் மூலம் பலன்களைப் பெற பெறலாம்…! முதல்வர் அறிவிப்பு…!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வைத்துள்ளார், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டைகளை அரசாங்கம் முடக்கம் செய்து வருவதாகக் கூறினார், இதனால் மாநில அரசின் திட்டங்களின் பலன்களை அவர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பெற முடியாத சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிர்பூமில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் தந்திரங்களை தனது அரசாங்கத்தின் இயல்பான செயல்பாடுகளைத் தடுக்க முடியாது, மாநில அரசின் நலத் திட்டங்களின் பலன்களை மக்கள் தொடர்ந்து பெறுவார்கள் செய்வார்கள் என்றும் கூறினார்.

பாஜக தலைமையிலான அரசு ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள். வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆதார் அட்டைகளை இணைத்து, தேர்தலுக்கு முன்பு மக்கள் வங்கிகள், இலவச ரேஷன் திட்டம் மூலம் பலன்களைப் பெற முடியாத சூழல் உருவாகும். ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.

Vignesh

Next Post

அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு...! இந்த தவறை மட்டும் செய்யாதிங்க...!

Mon Feb 19 , 2024
அக்னிவீர் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்திற்கு அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப் பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண்ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக […]

You May Like