fbpx

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச காலணி…! அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு.‌.!

தமிழ்நாடு அரசால் விலையில்லா நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளாகவும் Footwear ) 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலேந்திகளாகவும் (Shoes ) வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்த பார்வையில் காணும் அரசுச் செயலாளர் அவர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . பள்ளி மாணவர்களின் கால் அளவுகளை எடுப்பதற்காக ITK தன்னார்வலர்களை உட்படுத்தி அளவுகளை துல்லியமாக எடுக்க வேண்டும்.

அதன் விவரங்களின்படி விலையில்லா நலத்திட்டப் பொருள்களான காலணிகள் ( Footwear ) மற்றும் காலேந்திகள் ( Shoes ) உருவாக்குவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி ) , வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருது...! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

Sat Feb 3 , 2024
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள், 2023-ன் கீழ் பரிந்துரைகளைப் பதிவு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி , 12 முன்னுரிமைப் பிரிவுத் திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி. இந்தப் பிரிவில் 10 விருதுகள் வழங்கப்படும்.அடுத்ததாக, மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநிலங்கள், மாவட்டங்களுக்கான கண்டுபிடிப்புகள் மீது 6 […]

You May Like