ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனங்கள் இணைந்துள்ள காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. இதன் மூலம், நிறுவனம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இந்த செயலியில் 149 ரூபாய்க்கு அடிப்படைத் திட்டத்தையும், மூன்று மாதங்களுக்கு 499 ரூபாய்க்கு விளம்பரமில்லா திட்டத்தையும் வழங்கவுள்ளது. அதன்படி ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மட்டும் இனி ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பாகும். மேலும், ஜியோசினிமா, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கான உரிமைகளையும் பெற்றிருந்தது. அதேபோல இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டிகள் மற்றும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளுக்கான உரிமைகளையும் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் செயலி பெற்றுள்ளது. எனவே இவற்றையும் இந்த ரிலையன்ஸ்-டிஸ்னி செயலியில் காணலாம்.
உங்கள் மொபைல் அல்லது டிவியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், தற்போது ஜியோஹாட்ஸ்டாருக்காக தனியாக எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. அதாவது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்பது ஜியோஹாட்ஸ்டார் என மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஜியோசினிமா செயலி பின்னர் அகற்றப்படும்.
திட்டங்கள் : பிரீமியம் விளம்பரம் இல்லாத திட்டத்தின் விலை 3 மாதங்களுக்கு ரூ.499 மற்றும் 1 வருடத்திற்கு ரூ.1499. இதில், பயனர்கள் ஒரே நேரத்தில் 4 சாதனங்கள் வரை உள்நுழையலாம். இதை டிவி, மடிக்கணினி அல்லது மொபைலிலும் அணுகலாம். இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் 4K 2160P டால்பி விஷன், டால்பி அட்மாஸ் ஆகியவற்றில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். இது முற்றிலும் விளம்பரமில்லாத உள்ளடக்கத்தை வழங்கும். இருப்பினும், நேரடி போட்டிகளின் போது விளம்பரங்கள் காட்டப்படலாம்.