fbpx

AI கற்க ஆர்வம் உள்ளவர்களா…? வரும் 28-ம் தேதி தமிழக அரசு சார்பில் ChatGPT குறித்து இலவச பயிற்சி வகுப்பு…!

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி 28-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்

ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளலாம். ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் தெரிந்துக் கொள்ளலாம். ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ள முடியும்.

தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும், ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். 100-க்கு மேற்பட்ட செயல்திறன் கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன் ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும், அன்றாட ப்ராம்ப்ட் வழிகாட்டுதல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்அப் சமூக அணுகலையும் பெறுவார்கள்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் : 8072 799 983 / 90806 09808

English Summary

Free training course on ChatGPT to be held on the 28th by the Tamil Nadu government

Vignesh

Next Post

இது என்னடா புது ட்ரெண்டா இருக்கு!. வீடியோ காலில் புனித நீராடிய கணவர்!. செல்போனை தண்ணீரில் மூழ்கடித்த பெண்!. வைரல் வீடியோ!

Wed Feb 26 , 2025
What is this, a new trend!. Video: Husband takes holy dip in his feet!. Woman submerges her cell phone in water!. Viral video! Kumbh Mela

You May Like