fbpx

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச சிகிச்சை திட்டம்…! மத்திய அரசு சூப்பர் தகவல்.‌‌..!

மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நாடுமுழுவதும் ரூ.50,655 கோடி செலவில் 936 கிலோமீட்டர் நீளமுள்ள 8 முக்கிய தேசிய அதிவேக வழித்தடத் திட்டங்களை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. சுங்கம் இயக்குதல் மற்றும் பரிமாற்ற மாதிரியைப் பின்பற்றி சொத்து பணமாக்குதலின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.15,968 கோடி எட்டியுள்ளது. 11,12,13&14 சுங்கச் சாவடி தொகுப்புகளை பணமாக்கியதன் மூலம் இத்தொகை கிடைத்தது. இதுவரை இவ்வகையில் மொத்தம் ரூ.42,334 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக 35 பல்வகை பொருள் போக்குவரத்து பூங்காக்களின் கட்டமைப்பை உருவாக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் செயல்பாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களுடனும் இணைப்பை உறுதி செய்வதற்காக, தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை விரிவான துறைமுக இணைப்பு பெருந்திட்டத்தை சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி 1,300 கிமீ நீளமுள்ள 59 முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய தகவல் மையம் உருவாக்கிய அகில இந்திய சுற்றுலா அனுமதி தொகுதி, சுற்றுலாப் பயணிகளையும் அவர்களின் பொருட்களையும் சுற்றுலா வாகன ஆபரேட்டர்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல அனுமதிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்குகிறது. போக்குவரத்தை மேம்படுத்துகிறது. பலவகை அனுமதிகளின் தேவையை நீக்குவதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கிறது.

மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. பழைய வாகனங்களை உடைக்கும் திட்டத்தின் கீழ் (16.12.2024 நிலவரப்படி), 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 80 பதிவு செய்யப்பட்ட வாகனங்களை உடைக்கும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 66 கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Free treatment program for road accident victims

Vignesh

Next Post

ED அதிரடி...! அமைச்சர் செ.பாலாஜி சகோதரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...!

Fri Jan 10 , 2025
Chargesheet filed against 13 people including Minister Senthil Balaji's brother.

You May Like