fbpx

கலைஞர்‌ நூற்றாண்டு விழா முன்னிட்டு கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி…! ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு…!

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம்‌, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்‌ கால்நடை மருத்துவ முகாம்‌ நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌தனது செய்தி குறிப்பில்; கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழாவினைமுன்னிட்டு சேலம்‌ மாவட்டம்‌, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்‌, பசுவரெட்டிவளவு கிராமத்தில்‌ 11.08.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின்‌ நிறுவனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ ஆகியோர்‌ ஒன்றிணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ கால்நடை மருத்துவ முகாம்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம்‌, செயற்கைமுறை கரூவூட்டல்‌, சினை ஆய்வு, சினை பருவ ஒருங்கிணைப்பு, மலடு நீக்கம்‌, ஆண்மை நீக்கம்‌, சிறிய அளவிளான அறுவை சிகிச்சைகள்‌, புற ஒட்டுண்ணிகள்‌ நீக்கம்‌ ஆகிய பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளது. கால்நடை நோய்புலானாய்வு பிரிவின்‌ மூலம்‌ கால்நடைகளுக்கான தோல்‌ நோய்கள்‌, சாணம்‌, ரத்தம்‌, சளி, பால்‌ ஆகியவற்றை ஆய்வு செய்யப்படவுள்ளது. கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்‌ தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல்‌ நோய்‌ தடுப்பூசி மற்றும்‌ செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய்‌ தடுப்பூசிகள்‌ போடப்படவுள்ளது. கன்றுகள்‌ பேரணியும்‌ நடைபெறவுள்ளது

Vignesh

Next Post

இன்று தேசிய கைத்தறி தினம்...! டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு...!

Mon Aug 7 , 2023
தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினை கலைஞர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்த தினத்தின் […]

You May Like