fbpx

TNSTC: வரும் நவம்பர் 13-ம் தேதி முதல் ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு ஹால்டிக்கெட்….! ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்…!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ஆம் தேதி எழுத்து தோ்வு நடைபெறவுள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இப்பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 13-ம் தேதி முதல் www.tnstc.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தோ்வுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கனமழை அலெர்ட்!… இன்று 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…! உங்க மாவட்டமும் இருக்க…

Sun Oct 29 , 2023
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், […]

You May Like