fbpx

கவனம்…! நவம்பர் 15 முதல் 18-ம் தேதி வரை… பள்ளி மாணவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!

மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் சேலத்தில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கின. இதில், பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மாநில அளவிலான போட்டிகள் சேலத்தில் நவம்பர் 15-ம்தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து, மாவட்ட அளவில் 10 கலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து, மாநில அளவிலான போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வடகிழக்கு பருவமழை... 24 மணி நேரமும் பாதிப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியீடு...!

Tue Nov 7 , 2023
வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை தொடங்கயுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் […]

You May Like