fbpx

வரும் 31-ம் தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி…!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் 31.01.2024 முதல் 02.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள். ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 86681 00181. 600 032. 44-22252081/22252082, 8668102600

Vignesh

Next Post

மருத்துவமனையில் மகளின் உடலை பார்த்து கதறி அழுத இளையராஜா..!! நெஞ்சை நொறுக்கும் காட்சி..!!

Fri Jan 26 , 2024
இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில் பவதாரிணி காலமானார். இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மகளின் உடலை பார்த்து இசைஞானி […]

You May Like