இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் விடுமுறையுடன் சேர்த்து வார விடுமுறையும் வருவதால், அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு நடுவே தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக பயணிகள் வேதனை அடைகின்றனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து கட்டணம் 600 முதல் வசூலிக்கப்படுகின்ற நிலையில், தற்சமயம் தொடக்க கட்டணமே 1300 ரூபாய் என்று 2️ மடங்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது