fbpx

’இனி உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, நேரத்தை குறிப்பிட வேண்டும்’..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு ‘ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது இளம்பெண், திடீரென உயிரிழந்தார். கெட்டுப்போன பொருட்களால் ஷவர்மா தயாரித்ததால் தனது மகள் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், ‘உணவு பொட்டலங்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வை அனைத்து உணவகங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உணவு பாதுகாப்பு ஆணையர் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், இந்த வழிகாட்டுதல்களை மீறும் உணவகங்கள் தேவையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Chella

Next Post

10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!! கடும் கோபத்தில் மு.க.ஸ்டாலின் அரசு..!! அடுத்த ஆக்‌ஷன் இதுதான்..!!

Thu Nov 16 , 2023
நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், மீண்டும் சட்ட மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு […]

You May Like