fbpx

வருவாய் துறையில் இனி, அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியில் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்…

வருவாய்த்துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணையவழியில் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது பேசிய அவர் “ பேரிடர் முன்னறிவிப்பு, மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடி செலவில் பலப்படுத்தப்படும். தமிழகத்தில் சமீப காலங்களில் நிலநடுக்கம் உணர்வதை கருத்தில் கொண்டு தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நில நடுக்க கண்காணிப்பு மையம் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பாக இ-சேவைகள் தொடர்பான தகவல்களை அளிக்கும் வகையில் தொலைபேசி மையம் நிறுவப்படும். நில சீர்திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொல் நீக்கப்படும்.

நலிந்தோர் உதவித் தொகை திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் தொகை திட்டம் தொடர்பான சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும். வருவாய் துறையில் இனி வரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும். ஏற்கனவே 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகிறது. பதிவுபெற்ற சுய உதவிக் குழுக்களுக்கு குடிசைத் தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

'நம்ம தனிக் குடித்தனம் போலாம்...." சென்னைக்கு அழைத்த மனைவி வர மறுத்த கணவன்! மனைவி செய்து விபரீத செயல்!

Wed Apr 12 , 2023
தனி குடித்தனம் வருவதற்கு கணவர் சம்மதிக்காததால் ஏற்பட்ட மன விரக்தியில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் பிரமிச்சு பாளையத்தைச் சார்ந்தவர் சின்ரெல்லா. 21 வயதான இவர் சேலத்தைச் சார்ந்த நவீன் குமார் என்ற கொத்தனார் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து […]

You May Like