தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்றில் இருந்து தென் மாவட்டங்களில் தீவிரம் அடைய வாய்ப்புகள் உள்ளன. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி லேசாக வலிமை அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது