fbpx

பெண்களுக்கு இனி மாதத்தில் 2 நாட்கள் மாதவிடாய் விடுமுறை.. பிரபல இந்திய நிறுவனம் அறிவிப்பு..

இந்தியாவில் பெண் ஊழியர்களுக்கு மாத விடாய் விடுமுறை என்பது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.. அந்த வகையில் 1992-ம் ஆண்டில், நாட்டிலேயே முதன்முறையாக பீகார் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் 2 நாள் விடுமுறையை அறிவித்தது.. அதே போல் கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களிலும், பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. இதே போல் ஜப்பான், ஸ்வீடன், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுகிறது.. சமீபத்தில், ஸ்பெயின் அரசு, பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது..

மாதவிடாய் நாட்களில் அவதிப்படுகிறீர்களா?...இனி கவலை வேண்டாம்...பிரத்யேக ஆடை வந்துவிட்டது!

இந்நிலையில் பிரபல இந்திய வீடியோ ஷேரிங் செயலியான சிங்காரி (chingari) பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறையை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.. அதன்படி, பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் காலத்தில், மாதந்தோறும் ஊதியத்துடன் கூடிய 2 நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும்..

இந்தப் புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

எனினும் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் நிறுவனம் சிங்காரி அல்ல.. Zomato, Swiggy, Culture Machine, Byju’s , Matrubhumi போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு கொள்கையைக் ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றனர்.. எனினும், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் கூட, பெரும்பாலான நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அரசு வழங்கும் மானியம்...! 9 முதல் 11-ம் தேதி வரை இலவச பயிற்சி...! முன் பதிவு அவசியம்...!

Tue Mar 7 , 2023
தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,சென்னை, பொருட்கள்‌ சேவை மற்றும்‌ வரி மற்றும்‌ மின்‌ வழிச்‌ சீட்டு குறித்த இணையவழி பயிற்சியினை வரும்‌ 09.03.2023 தேதி முதல்‌ 11.03.2023-ம்‌ தேதி வரை (காலை 10.30 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை) வழங்க உள்ளது. இப்பயிற்சியில்‌ பொருட்கள்‌ சேவை மற்றும்‌ வரி மற்றும்‌ மின்‌ வழிச்‌ சீட்டு & அடிப்படை கணக்குகள்‌ விதிமுறைகள்‌ மற்றும்‌ […]

You May Like