உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..

அந்த வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் குறிப்பிட்ட சில தனிப்பட்ட உரையாடல்களை (Chat) லாக் செய்து கொள்ளும் (Lock) செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளீயாகி உள்ளது.. ‘சேட் கான்டாக்ட்’ ( Chat contact) அல்லது ‘குரூப் இன்ஃபோ’வை ( Group Info) பயன்படுத்தி, பயனர்கள் தங்களது தனிப்பட்ட உரையாடல்களை ‘லாக்’ செய்துகொள்ளலாம்.
வாட்ஸ்அப்-ன் அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிடும் WAbetainfo இணையத்தளத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் ‘லாக்டு சேட்’ (Locked Chat) பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். வாட்ஸ்அப்பில் அப்பட்டியல் தனியாகத் தோன்றும். லாக் செய்யப்பட்ட உரையாடல்களைப் பயனர் தமது விரல்ரேகை அல்லது கடவு எண் (passcode) கொண்டு மட்டுமே பார்க்கலாம். இதன் மூலம் யாரும் நம் அனுமதியின்றி நமது வாட்ஸ் அப் உரையாடல்களை படிக்க முடியாது.
இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டின் பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், சோதனைக்கு பின் விரைவில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது..