fbpx

ரெடி…! நாளை முதல்… 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு…! முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதிவரை ஸ்லாஸ் தேர்வு நடத்தப்படஉள்ளது.

கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்தில் இருந்து வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்தாள்கள், ஓஎம்ஆர் விடைத்தாள்களை பெற்று வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

English Summary

From tomorrow… exams for government school students studying in 3rd, 5th, and 8th standard

Vignesh

Next Post

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்!. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Mon Feb 3 , 2025
Day cancer centers to be set up in all district hospitals! Nirmala Sitharaman announces!

You May Like