fbpx

குழந்தைகளுக்கு எந்த வயது முதல் இறைச்சி கொடுக்கலாம்..? இது தெரியாம கொடுக்காதீங்க.. சிக்கல் தான்!!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க விரும்புகிறார்கள். ஏனெனில்.. ஆரோக்கியமான உணவை உண்ணும்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். முதல் ஆறு மாதங்களுக்கு, தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகளையும், பழங்களையும் கொடுக்க ஆரம்பிக்கிறோம்… ஆனால் குழந்தைகளுக்கு அசைவத்தை எந்த வயதில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும் என்று பலருக்கு தெரியவில்லை.. அதுகுறித்து பார்க்கலாம்..

6 முதல் 8 மாத குழந்தை இறைச்சி சாப்பிட ஆரம்பிக்கலாம். இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இறைச்சியைத் தொடங்குவதற்கு முன், முதலில் முட்டையுடன் தொடங்கவும். முட்டை கொடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன் கொடுக்கலாம்,  ஒரு வருடம் கழித்து தான் கோழி இறைச்சி கொடுக்க வேண்டும். அதுவும் சூப்பாக கொடுப்பது நல்லது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மட்டன் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் மட்டன் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

குழந்தைகளுக்கு அசைவ உணவின் நன்மைகள்: 6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் துத்தநாகம் மிகவும் தேவை. இவை தாய்ப்பாலில் போதாது எனவே வளரும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து உள்ள மற்ற உணவுகளை கொடுக்க வேண்டும். இறைச்சியில் இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. மக்னீசியமும் இதில் அதிகம். பழங்கள் மற்றும் தானியங்களை விட இறைச்சியில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சிறிதளவு இறைச்சியைக் குழந்தைக்குக் கொடுத்தாலும் போதுமான சத்துக்கள் கிடைக்கும். மேலும், குழந்தைகளுக்கு இறைச்சியைக் கொடுத்தால், அவர்களின் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.

இறைச்சி இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரம் மட்டுமல்ல, மற்ற உணவுகளிலிருந்து இரும்பை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. காய்கறிகளுடன் சிறிதளவு இறைச்சி கலந்து சாப்பிட்டால் இரும்புச் சத்து அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கு ரத்தசோகை ஏற்படாது. கோழி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் டி உடலில் உள்ள நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

குறிப்பு: இறைச்சியை குழந்தைகளுக்கு முதலில் சூப் வடிவில் கொடுக்க வேண்டும். வேகவைத்த இறைச்சியை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. எலும்பில்லாத இறைச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் இறைச்சி எப்போதும் புதியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரும். சமைப்பதற்கு முன் இறைச்சியை நன்கு கழுவவும்.

Read more ; அண்ணன்-தங்கை திருமணம்.. மறுப்பு தெரிவித்தால் கடுமையான தண்டனை..!! – இந்தியாவில் விநோத பழக்கம் கொண்ட பழங்குடியினர்

English Summary

From what age should children be given meat?

Next Post

ஒரு மாதம் பால் டீ குடிக்காமல் இருந்தால், உங்கள் உடலில் இந்த மாற்றங்கள் தெரியும்!. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

Fri Jan 24 , 2025
If you don't drink milk tea for a month, you will notice these changes in your body! How to break this habit?

You May Like