fbpx

கொளுந்தனுடன் உல்லாசம்..!! மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்..!! ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்..!!

திருச்சி காவல் நிலையத்திற்குள் ரத்தம் சொட்ட சொட்ட கையில் அரிவாளுடன் இளைஞர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய மனைவியைக் கொன்று விட்டதாக வாக்குமூலம் கொடுத்தப்படியே காவல் நிலையத்திற்குள் அமர்நாத் (28) என்பவர் நுழைந்தார். திருச்சி அண்ணா நகரில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். அமர்நாத்தின் தம்பி ரகுநாத்துக்கும், அமர்நாத் மனைவிக்குமிடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது தம்பியும், மனைவியும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டும், மெசேஜ் அனுப்பியும் இருந்ததாகவும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுவதையடுத்து, தனது தம்பியையும், மனைவியையும் கண்டித்திருக்கிறார் அமர்நாத்.

ஆனால், அதையும் மீறி கொளுந்தனுடன் பழகுவதை அமர்நாத்தின் மனைவி விடவில்லை. இதுகுறித்து சம்பவத்தன்று மீண்டும் மனைவியிடம் கேட்டிருக்கிறார். அப்போது கணவன் – மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவருக்குமிடையேயான வாக்குவாதம் முற்றிப் போக, ஆந்திரம் அடைந்த அமர்நாத், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தன் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் வலியால் அலறித் துடித்திருக்கிறார். பின்னர் அவர் மயங்கிய நிலையில், உயிரிழந்து விட்டதாக கருதி, மனைவியை வெட்டிய அரிவாளோடு திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று அமர்நாத் சரணடைந்தார். என் பொண்டாட்டியை இந்த அரிவாளால் வெட்டி கொலைச் செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.

இந்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்து, தலைப் பகுதிகளில் பலத்த காயமடைந்திருக்கும் அந்தப் பெண், திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Chella

Next Post

இந்திய கடற்படை முகாமில் தமிழக வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை……! நாகையில் பரபரப்பு…..!

Mon May 1 , 2023
நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் ஒன்று இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்புக்கு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே கமெண்ட் தலைமையில் 50க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 3 45 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. ஆகவே […]
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்..! கொலையும்.. தற்கொலையும்..! ஒருதலை காதல் சோகம்..!

You May Like