fbpx

கதவை திறந்த கங்கா..!! சட்டென்று நுழைந்த கும்பல்..!! துணிகளை அகற்றி நிர்வாண வீடியோ..!! பரபரப்பு சம்பவம்..!!

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கங்கா (70). இவரது கணவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி மகனும், மருமகளும் வேலைக்கு சென்ற நிலையில், கங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் கங்காவின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். இதையடுத்து, கங்கா கதவை திறந்த உடனே அந்த கும்பல் வீட்டிற்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கங்கா அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கி கை, கால்களை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், கங்காவை நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன், தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது மகாதேவனின் கடையில் வேலை செய்யும் மணிகண்டன் என்பவர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதில், மகாதேவன் நடத்தி வரும் கடையில் மணிகண்டன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 7 மாத சம்பளம் பாக்கி இருந்ததால் பலமுறை சம்பள பாக்கியை தரும்படி மகாதேவனிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரை சரமாரியாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கைதாகிறார் கவர்ச்சி நடிகை யாஷிகா..!! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

Thu Mar 23 , 2023
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை யாஷிகா இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மார்ச் 21ஆம் தேதி […]

You May Like