fbpx

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!! உடனே விடுதலை செய்யவும் சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இதே குற்றச்சாட்டிற்காக 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்துச் செல்வதால், இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் எனவும், அந்த 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த மனுவிற்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம், ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல்துறை வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வேறு வழக்குகளில் ஜாமீன் பெற தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.

Read More : உடலுறவுக்கு கணவனிடம் பணம் வசூலித்த மனைவி..!! நிபந்தனையால் கணவன் அதிர்ச்சி..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

English Summary

The Madras High Court has quashed the gangster law imposed on Chavku Shankar

Chella

Next Post

’கமலே போய்டாரு’..!! ’இதுக்கும் மேல பிக்பாஸ் நடக்குமா’..? விஜய் டிவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Fri Aug 9 , 2024
Will Bigg Boss show happen this time due to Kamal's absence? Isn't it? Many people are questioning that.

You May Like