fbpx

ஒரே ஒரு போன் கால் போதும் டோர் டெலிவரி செய்யப்படும் கஞ்சா…….! அதிர்ச்சியில் சென்னை மக்கள் என்ன செய்கிறது காவல்துறை….?

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பது தான் எங்களுடைய முதல் பணி என்று சொல்லி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், அதன் பிறகு தான், தமிழகத்தில் போதைப் பொருட்களின் விநியோகம் அதிகமாக இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், முன்பெல்லாம், கலாச்சாராய விற்பனை மட்டும்தான் சட்டவிரோதமாக நடைபெறும். ஆனால், தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

இப்படி சர்வ, சாதாரணமாக நடைபெறும் போதை பொருள் விற்பனையை, தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் எழுகிறது. இன்னும் சொல்லப்போனால், நகரங்களை கடந்து கிராமப்புறங்களிலும் கஞ்சா வினியோகம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக, பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

அந்த வகையில், சென்னை, காசிமேடு, பள்ளம் பகுதியில், இரு பெண்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக, காசிமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, இந்திரா(37), சுதா(38) உள்ளிட்ட 2 பெண்களின் இருப்பிடத்திற்கு சென்று காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து, விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர். கைதுசெய்யபட்ட 2 பெண்களிடம் இருந்து, சுமார் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கைது செய்யப்பட்ட பெண்கள், தங்களை யாராவது தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டால், கஞ்சாவை டோர் டெலிவரி செய்வதும், கஞ்சா விற்பனை செய்வது ஏதோ, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை போல, தங்களிடம் பேசியதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மீண்டும் வந்தாச்சு..!! இனி இவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Aug 7 , 2023
ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு, உரிமைத்தொகை பெற விரும்பும் பெண்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு […]

You May Like