சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது.
எனவே, தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1893க்கு விற்பனையாகின்றது. இருப்பினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதை எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வியாபார தாரர்களுக்கு சலுகை வழங்கப்படும் நிலையில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் இதில் வழங்கப்படவில்லை.