இணையதள யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. நகைச்சுவை & அப்பாவியான பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலர் கவனத்திற்கு சென்றடைந்துள்ளார். நகைச்சுவை பாணியில் யூடியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர், தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இறுதி வரை செல்லாமல் இரண்டு வாரங்களிலேயே தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது ஜி.பி முத்து ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.