fbpx

ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்களே… இன்று காலை 10 மணி முதல்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10.00 மணிக்கு புஞ்சையரசந்தாங்கல், உத்திரமேரூர் வட்டத்தில் காவனூர் புதுச்சேரி, வாலாஜாபாத் வட்டத்தில் தேவரியம்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மேட்டுப்பாளையம், குன்றத்தூர் வட்டத்தில் திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்‌ பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாணவர்களை அழ வைத்த நடிகர் தாமு!… விமர்சனமும்!… தமிழக அரசின் அதிரடியும்!

Sat Nov 18 , 2023
90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த தாமு தற்போது கல்வி சேவைகள் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் தேம்பி அழும் காணொளிகளை செய்திகளில் காண முடிந்தது. நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடம் அவர்களை படிக்க வைக்க அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்கள் குறித்தும் மாணவர்கள் செய்யும் […]

You May Like