fbpx

“என்னையே வேண்டான்னு சொல்லுவியா?” ஆத்திரத்தில் காதலி செய்த கொடூர செயல்…

விழுப்புரத்தை சேர்ந்தவர் 24 வயதான ஜெயசூர்யா. சட்டக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 20 வயதான ரம்யா என்ற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து இருவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரம்யாவின் பெற்றோர் ஜெயசூர்யாவை அழைத்து ரம்யா உனக்கு தங்கச்சி முறை எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஜெயசூர்யா, தனது காதலியிடம் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் ரம்யா, நாம் திருமணம் செய்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் இதற்கு ஜெயசூர்யா மறுப்பு தெரிவித்தால் ரம்யா கைகளில் அறுத்துக் கொண்டு, அந்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஜெயசூர்யாவுக்கு அனுப்பி உள்ளார்.
இதனால் பதறிப்போன ஜெயசூர்யா, மீண்டும் தன் காதலியுடன் பேசி வந்துள்ளார்.

பின்னர், ஜெயசூர்யாவை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது, என் அப்பாவாக இருந்தாலும் அவருக்கு நான் எலி மருந்து கொடுத்து கொலை செய்வேன் என்று ரம்யா ஜெயசூர்யாவுக்கு whatsapp-ல் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்துப் போன ஜெயசூர்யா, ரம்யா உடன் தொடர்பில் இருப்பதை துண்டித்துள்ளார். பின்னர் ரம்யா, நான் உன்னை பார்க்க வேண்டும் என ஜெயசூர்யாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் தான் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ரம்யா ஜெயசூர்யா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரம்யா, தனது காதலனுக்காக எலி மருந்து கலந்த டீயை கொடுத்துள்ளார். இதை அறியாமல் ஜெயசூர்யா டீயை குடித்தவுடன், குடித்து முடித்து விட்டியா என்ன ரம்யா கேட்டுள்ளார். அதற்கு ஜெயசூர்யா, குடித்துவிட்டேன் எனக் கூறவே, அதில் எலி மருந்து கலந்து கொடுத்தேன், என்னையே வேணாம் என்று சொல்கிறாயா என ரம்யா கூறியுள்ளார்.

ஆனால் காதலனால் இதை நம்ப முடியவில்லை. இதனால் அவர் ரம்யாவிடம் சும்மா சொல்லாதே உண்மையை சொல் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அரை மணி நேரத்தில் ஜெயசூர்யாவின் மூக்கில் புகை வந்து உடல் உபாதைகள் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடன் இருந்த நண்பர் ஜெயசூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடந்ததை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஜெயசூர்யாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து போய் இருப்பதும், மஞ்சை காமாலை வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஜெயசூர்யா உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, ரம்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், எழும்பூர் மேஸ்டேட் முன்னிலையில் காதலன் ஜெயசூர்யாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: “வெறும் 30 ஆயிரம்.. சின்ன வீடா வைக்க சொல்லி பேரம் பேசியவ அவ..!” நடிகை வீடியோவிற்கு சீமான் பதிலடி

English Summary

girl tried to kill her lover

Next Post

பெற்றோருக்கான 7-7-7 விதி என்ன..? குழந்தைகள் நல்வழியில் வளர செய்ய வேண்டியது இதுதான்..!

Sun Mar 2 , 2025
What is 7-7-7 rule of parenting? Know how it helps in growth of Gen Z and Alpha children

You May Like