சேலத்தைச் சேர்ந்த கோகுல் குமார் இவருடைய மனைவி மிர்லா தேவி இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கிறார். மேலும் கோகுல் குமார் திமுகவின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது.
அதோடு கோகுல் குமாருக்கு குடும்பத்துடன் சென்று முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து கிளம்பி மனைவி மற்றும் மகளுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அண்ணா அறிவாலயத்திற்கு முக்கிய பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர். தொண்டர்களும் ஏராளமான திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் முதல்வரை சந்திக்க முடியுமா? என்ற சந்தேகத்தில் அந்த குடும்பத்தினர் காத்திருந்தனர்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் காரில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை தந்த உற்சாகத்தில் மிர்லா தேவி கைகளில் இருந்த சிறுமி உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து தாத்தா, தாத்தா என்று பாசத்தோடு உரத்த குரலில் அழைத்துள்ளார். அந்த சிறுமியின் அழைப்பு முதல்வரை வெகுவாக கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களுடைய பாதுகாவலர்களிடம் அந்த சிறுமியையும், அவரது பெற்றோர்களையும் அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.ஆகவே பாதுகாவலர்கள் அந்த சிறுமியையும், அவரது பெற்றோரையும் முதல்வர் ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றனர். அவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் சிறுமியிடம் பேசி நலம் விசாரித்தார் மேலும் சிறுமியின் பெற்றோரிடமும் பேசி உள்ளார்.
அதோடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வெளியே வந்த அந்த குடும்பத்தினர் மகிழ்வுடன் காணப்பட்டனர். அந்த சிறுமியின் தாய் மிர்லாதேவி தெரிவித்ததாவது முதல்வரின் தார் வந்தபோது என்னுடைய மகன் தாத்தா, தாத்தா என்று அழைத்தார் என்னுடைய மகள் அழைத்ததால் முதல்வரையில் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.