தேனி அருகே ஓடைப்பட்டியில் சமத்துவரத்தில் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே வருசநாடு , மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா . இவரது தனது 8 வயது மகளான ஹாசினி ராணியை சமத்துவபுத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தாத்தாவின் வீட்டு முன்பு சிறுமி விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றார். பெரிய பெரிய குழிகள் தோண்டப்பட்டிருப்பதை சிறுமி அறிந்திருக்கவில்லை. அப்போது குழி தோண்டப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றிருக்கின்றார். கழிவறை வசதி இல்லாததால் சிறுமி இயற்கை உபாதை கழிக்க அப்பகுதிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அந்த பகுதியில் ஆழமான பள்ளத்தை கவனிக்காதல் அதில் தவறி விழுந்தார் ஹாசினி. 7 அடிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் 4 அடிக்கு மேல் தேங்கியுள்ளது. சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறி பறிதாபமாக உயிரிழந்தார்.

. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பூங்கா அமைக்கும் ஒப்பந்ததாரர் யார் என்பது குறித்துதகவல் கேட்டபோதும் முறையான பதில் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அறிவிப்பு பலகையோ எச்சரிக்கை நடவடிக்கைகளோ எதுவும் செய்யவில்லை. சிறுமி பலியாக காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் சிறுமி உயிரிழப்பு குறித்தும் பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி என்பவர் கூறுகையில் ’’ இறந்த ஹாசினியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் , இந்த பணியானது கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது. 6 மாதத்திற்கு முன்பே முடிந்து இருக்கக் கூடிய வேலை. பல முறை தகவல் அனுப்பப்பட்டு காலநீட்டிப்பு செய்து கொண்டிருந்தார்கள் . தற்போது மீண்டும் பணி தொடங்கப்பட்டது. பூங்கா வேலையின்போது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினார் பள்ளதத்தில் தண்ணீர் நிறைந்துள்ளது. குழந்தை தவறி விழுந்துள்ளது. இது சோகமான நிகழ்வு . இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு தகுந்த நடிவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடக்கூடிய இடத்தில் பள்ளமானது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்துள்ளது. தற்போதைக்கு வேலி அமைத்து தகுந்த அதிகாரிகளின் உத்தரவின் படி வேலை தொடர்ந்து நடைபெற உள்ளது. இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்..’’ என்றார்.
எனினும் அவர் ஒப்பந்ததார் யார் என்பது பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ். கண்டனம்
பள்ளம் மூடப்படாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அசம்பாவிதங்களின் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.