fbpx

பெண்களே ஜாக்கிரதை பாத்ரூமில் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவர்களுக்கு அடி உதை….! சென்னை அருகே பரபரப்பு….!

பொதுவாக, பெண்கள் அனைத்து இடங்களிலும், எல்லா விஷயங்களிலும் உஷாராக இருப்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிவிட்டது. அப்படி நாம் சற்று உஷாராக இல்லாவிட்டால், அந்த நேரத்தில், நமக்கு எதிராக பல்வேறு வேலைகளை செய்வதற்கு, நம்மை சுற்றி பலர் இருக்கிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதனை உணர்த்தும் வகையில், சென்னை அருகே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய உறவினரின் திருமணத்திற்காக, ஒரு திருமண மண்டபத்தில் வந்து தங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

அந்த திருமணத்தில், சமையல் வேலை செய்வதற்காக பலர் வந்திருந்தனர். அதில் இரண்டு சிறுவர்கள் மட்டும் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த அந்த இளம் பெண், குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனை குளித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டார்.

இதனால் பதறிப் போன அந்த இரண்டு சிறுவர்களும், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, மண்டபத்தில் இருந்த அனைவரும் உஷாராகி, அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடி வரத் தொடங்கினர்.

இதன்பிறகு அங்கு வந்த நபர்கள் ,இந்த இளைஞர்கள் இருவரும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து, அவர்களை பிடித்து, அங்கேயே சரமாரியாக தாக்கி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த இருவரில் ஒருவரின் பெயர் பச்சையப்பன் என்றும் மற்றொருவர் 17 வயதான சிறுவன் என்றும் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்ததோடு, அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், பச்சையப்பனை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.

Next Post

இந்தியன் வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Wed Sep 20 , 2023
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Specialist பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 15 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like