குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு பிரச்சனையாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு. பெரியவர்களை விட குழந்தைகள் தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கருத்துப்படி, ஊட்டச்சத்து குறைபாடு என்பது கடைசி கட்ட புற்றுநோயுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும், இது குழந்தைகளின் மரணத்திற்கும் காரணமாகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது பாதிப்பு அதிகரிக்கிறது. இது கேன்சர் பாதிப்பில் தனித்துவமான பிரச்சனையாக இருக்கிறது. மேலும், தொற்று மற்றும் சைட்டோபீனியாக்கள் உள்ளிட்ட பிற பக்க விளைவுகளை போலவே ஊட்டச்சத்து குறைபாடு அங்கீகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் ஜிங்க் குறைபாடுகள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் அளவை அதிகரிக்க செய்யும். இது டிஎன்ஏ-வை சேதப்படுத்தி தீங்கு விளைவிக்க கூடும். மேலும், ஆரோக்கியமான உணவுகள் டிஎன்ஏ ரிப்பேர் செயல்முறைகளை ஊக்குவிக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மரபணு மாற்றங்களை நிறுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் என்பதால், எளிதில் அவர்கள் தொற்றுக்கு ஆளாகக்கூடும்.
ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக பொதுவாக வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். இது நோய்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு கூட ஒருவரை ஆளாக்கக் கூடும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பொதுவாக புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையைத் தாங்க முடியாது. இது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை குறைக்கும். எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.