fbpx

ஆய்வில் அதிர்ச்சி..! இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்கும் ஆபத்து..! அதிகரித்து வரும் வெப்பத்தால் உருகும் பனிப்பாறைகள்!…

மிக வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் வெள்ளத்தால், இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு நாடுகளில் ஒன்றரை கோடி மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பருவநிலை மாற்றங்களால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, அதிகரித்து வரும் புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கும், கடல் நீர் நிலத்தில் புகுந்ததால் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். மேலும், பனிப்பாறைகளில் இருந்து வரும் தண்ணீர் செல்லும் பாதையில் இருக்கும் ஏரிகளின் கரைகளில் அதிகளவில் வசித்து வரும் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளார்கள் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பருவநிலை சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தால் மட்டும் இதுபோன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடுவதில்லை என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இருப்பினும் பனிப்பாறை உருகுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முந்தைய கால கட்டங்களான 1941 ஆம் ஆண்டு பெரு நாட்டில் பனிப்பாறை நீரால் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் 2017ல் மிக மோசமான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் நேபாளத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் 2013ல் பனிப்பாறை உருக்கத்தால் ஏற்பட்ட பெரு வெள்ளம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு...! NEET PG தேர்வு தேதியில் மாற்றமா...? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்...!

Sat Feb 11 , 2023
நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பதில் அளித்து பேசிய அவர்; தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு- முதுகலை பட்டதாரி (NEET PG 2023) ஒத்திவைக்கப்படாது என்று தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் தேர்வு மற்றும் கவுன்சிலிங் செயல்முறைகளில் மேலும் தாமதங்களைத் தடுக்க முதுகலை […]
களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

You May Like