X: எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் உலகளவில் ஆயிரக்கணக்கானோருக்கு முடங்கியதால் பயனர்கள் புகார் அளித்தனர். அமெரிக்காவில் மட்டும் 80% பேரின் எக்ஸ் தளம் முடங்கியதாக புகார் வந்துள்ளதாக, Downdetector.com அறிக்கை அளித்துள்ளது.
உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் நேற்று காலை 10. 28 மணியளவில் திடீரென செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர். இந்த பிரச்னையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் சந்தித்துள்ளதாகவும், ஒரு சிலருக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அவர்களால் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது, அமெரிக்காவில் மட்டும் 7,743க்கும் மேற்பட்டோரின் தளம் செயலிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் செயலிழப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. டவுண்டெக்டரில் இந்த செயலிழப்பு புகார்கள் 260 புகார்களை காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, X சிக்கலை ஒப்புக்கொண்டது மற்றும் சிக்கலைத் தீர்க்க அவர்களின் தொழில்நுட்பக் குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. பயனர்களின் சிரமத்திற்கு எக்ஸ் நிறுவனம் வருந்துவதாக பதிவிட்டுள்ளது மற்றும் பயனர்கள் செயலிழப்பு காரணத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
Readmore: பரபரப்பு…! சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு…!