fbpx

புதுசா வீடு வாங்கப்போறீங்களா..? எல்லாமே மாறிடுச்சு..!! இந்த விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோருக்கு சூப்பர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டுவந்துள்ள திட்டங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கடந்த 22 ஜூன் 2017 முதல் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது. இதில், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களால் அபிவிருத்தி செய்யப்படும் 8-க்கும் மேற்பட்ட யூனிட்கள் (அலகுகள்) அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் நிலப்பரப்பு கொண்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டமாகும். இந்த ஆணையம் ஆரம்பித்தபோது, கட்டுமான திட்ட ஆவணங்கள், “மேனுவல்” முறையில் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையே, தீர்ப்பாயத்துக்கு என தனியாக, www.tnreat.tn.gov.in/ என்ற பெயரில் புதிய இணையதளம் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்நிலையில் தான், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோர், கூடுதல் விவரங்களை அறியும் வகையில் சிறப்பு வசதியை, ரியல் எஸ்டேட் ஆணையம் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரியல் எஸ்டேட் ஆணையம், ஒவ்வொரு கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் வெளியிடுகிறது.

இதன் மூலம் புதிதாக வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளம் மூலம் எளிதாக பார்க்கலாம். மேலும், கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் ஆவணங்களின் உண்மை தன்மையும், இதன் வாயிலாக உறுதி செய்யப்படுகிறத. தமிழ்நாடு அரசின் இந்த அதிரடியானது, வீடு வாங்கும் மக்களுக்கு பேருதவியாக இருப்பதுடன், கட்டுமான நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கவும் உதவுகிறது.

Read More : மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!! இனி இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! குட் நியூஸ்..!!

English Summary

In this post we will see about the new projects introduced by the Real Estate Authority.

Chella

Next Post

அதிகாலையிலே சோகம்.. மகளிர் விடுதியில் பயங்கர தீ விபத்து..!! 2 பேர் உடல் கருகி பலி..

Thu Sep 12 , 2024
A fire broke out in a women's hostel near Katrapalayam in Madurai. Two women died in this fire accident.

You May Like