இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 45,400-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,675-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,141 ரூபாயாகவும், ஒரு சவரன் 49,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் 40 காசுகள் குறைந்து ரூ.78.60 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.78,600-க்கு விற்பனையாகிறது.