fbpx

Gold Rate | இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 27) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 8,010-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more : சென்னையில் மின்சார ரயில்கள் இரண்டு நாட்கள் ரத்து.. பயணிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

English Summary

Gold price lower for second day..

Next Post

காதலர் தினத்தில் ஆடம்பர காரை பரிசளித்த கணவன்.. மனைவி செய்த செயலால் குப்பையில் வீசப்பட்ட சொகுசு கார்..!!

Thu Feb 27 , 2025
Russian man dumps Porsche in trash after wife snubs it as Valentine's Day gift

You May Like