fbpx

உச்சத்திலும் உச்சம்.. பேரிடியை இறக்கிய தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா..?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அந்த வகையில்  கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 7,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தை மாதத்தில் திருமண நிகழ்விற்காக தங்கத்தை வாங்க காத்திருந்த மக்கள் அதிர்சி அடைந்துள்ளது. 

Read more : மெய்சிலிர்க்க வைக்கும் ரயில் பயணம்.. கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற ரயில் பாதை..!! இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா..?

English Summary

Gold prices hit new highs again – today’s situation

Next Post

அதிர்ச்சி!. இந்தியாவில் 40-50% ஆண்களிடையே மலட்டுத்தன்மை!. விந்தணு உறைதலை நாடும் ஆண்கள்!. தீர்வு என்ன?

Fri Jan 31 , 2025
Shock!. 40-50% male infertility in India!. Men seeking sperm freezing! What is the solution?

You May Like