fbpx

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ரூ.60,000-ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 20) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.59,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.7,450-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ”நான் தெரியாமத் தான் கேக்குறேன்”..!! ”மக்களை சந்திக்க எதுக்கு ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி”..? விஜய்யை விளாசிய அண்ணாமலை

English Summary

In Chennai today (January 20), the price of gold jewelry rose by Rs. 120 per sovereign, selling for Rs. 59,600.

Chella

Next Post

பொதுமக்கள் லஞ்ச புகார்களை மாவட்ட DVAC அலுவலகங்களில் பதிவு செய்யலாம்..!! - RTI

Mon Jan 20 , 2025
Public can lodge bribery complaints with district DVAC offices, says RTI reply

You May Like