தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், தற்போது தினசரி விலை நிலவரம் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2022இல் 37 ஆயிரத்திற்கு தங்கம் விற்பனையானது. ஆனால் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை 46 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து 5,775 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200 ஆக விற்பனையாகியது.
இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 664 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,536 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 692 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரே நாளில் ரூ.600 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 காசுகள் குறைந்து ரூ.82.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.82,400-ஆக இருக்கிறது.