fbpx

Gold Rate | இன்று (டிச.17) மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், டிசம்பர் 17ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.57,120-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,140-க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.

Read More : ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம்..!! தவறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் அதிரடி..!!

English Summary

Today, December 17th, the price of gold jewelry in Chennai has increased by Rs. 80 per sovereign.

Chella

Next Post

குளிர்காலத்தில் கண் எரிச்சல் ஏற்படுகிறதா..? கண் ஆரோக்கியத்திற்கு இதை செய்யுங்க.. டாக்டர் அட்வைஸ்...

Tue Dec 17 , 2024
Let's take a look at some tips to help keep your eyes healthy during winter.

You May Like