fbpx

தங்கம், வெள்ளி விலை உயர்வு எதிரொலி..!! பட்டுச்சேலைகளின் விலையும் தாறுமாறாக உயர்வு..!!

தங்கம்-வெள்ளி விலை உயர்ந்து வரும் நிலையில், பட்டுச்சேலையின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22) இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.54,880-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் ரூ.6,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 1.30 உயர்ந்து ரூ.100.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.100,300-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில், தங்கம்-வெள்ளி விலை உயர்ந்து வரும் நிலையில், பட்டுச்சேலையின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சேலைகளின் ஜரிகை வேலைப்பாடுகளை செய்ய தங்கம், வெள்ளி பயன்படுத்தப்படுவதால், விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் பட்டுச் சேலையின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Read More : இது என்ன Bi-Directional மின் மீட்டர்..? ரூ.5,011 கட்டணமா..? என்ன நன்மைகள்..? மின்வாரியம் அதிரடி..!!

English Summary

As the price of gold and silver is increasing, the price of silk has also increased dramatically.

Chella

Next Post

'இந்த போட்டா-வ எடுத்தது தளபதி தான்..!' ஜெயம்ரவி மனைவி பகிர்ந்த இதுவரை பார்க்காத போட்டோ..!

Wed May 22 , 2024
ஜெயம் ரவியுடன் இருக்கும் யாரும் பார்த்திடாத புகைப்படத்தை பகிர்ந்த அவரது மனைவி இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் ஜெயம் ரவி 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2  மகன்கள் உள்ளனர்.  சமூக வலைதளங்களில் ஆர்த்தி ஆக்டிவாக இருக்கும் நிலையில், ஜெயம் ரவி உடன் இருக்கும் இதுவரை யாரும் […]

You May Like