fbpx

மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!!

தமிழ்நாட்டில் 4,829 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.45,000 கோடி வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. வரும் ஆண்டில் ரூ.50,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருமானம் கணிசமாக கைகொடுத்து வருகிறது.

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 4,829 கடைகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் ரூ.2 லட்சத்து மேல் விற்பனையாகும் ‘ஏ’ பிரிவு கடைகள் 1,000 செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் தற்போது புதிதாக 2 விற்பனை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே கூடுதல் விலையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ‘கியூ.ஆர். கோடு’ மூலம் மது விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தினமும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகும் மதுக்கடைகளில் இரண்டு விற்பனை பிரிவுகளை தொடங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதால், மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சராசரி விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளில் 2 விற்பனை பிரிவுகள் அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்தியப் பிறகு கடை பணியில் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளருக்கு ஜி.பி.எஸ். புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேற்படி, கடைப்பணியில் இல்லாத கடை மேற்பார்வையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபானக் கடையின் கடை எண்ணுடன் கூடிய பெயர் பலகை மற்றும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். அனைத்து விதமான பதிவேடுகளும் தினந்தோறும் பராமரிக்கப்பட வேண்டும். கடையின் விற்பனையில் வெளிநபர்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடைப் பணியாளர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More : மக்களை கைவிட்ட விடியா திமுக அரசு..!! அது என்ன Rapid Reponse Team..? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கவனிச்சீங்களா..?

English Summary

The name board with the shop number of the liquor shop and the price list should be kept visible to the customers.

Chella

Next Post

விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் இந்த கார்டு பற்றி உங்களுக்கு தெரியுமா..? உடனே வாங்கிடுங்க..!!

Wed Oct 16 , 2024
The Kisan Credit Card scheme will fix the interest rate on loans to farmers at only 2 to 4 percent.

You May Like